வியாழன், 24 ஜூலை, 2014

திருக்குறள் சன்மார்க்க உரை

 1. கடவுள் வாழ்த்து 
இறைவனது திருவடி சிறப்பை வாழ்துவது

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
    பகவன் முதற்றே உலகு.

எழுத்தெல்லாம் - உலகில் உள்ள எந்த மொழியில் இருக்கும் எழுத்தை உச்சரிக்கப், பேச வேண்டுமாயினும்
  
அகர முதல  - வை  'ஆ ' எனத் திறந்த பின்னரே (மூடி இருக்கும் உதடுகள் இரண்டாக திறந்து) உச்சாரிக்கவும், பேசவும் முடியும். ஆகையால் என்மொழிக்கும், எவ்வெழுத்துக்கும் 'ஆ ' என்பதே முதன்மை ஆகிறது.

ஆதிபகவன் - ஆதியாகிய அனைத்திற்கும் முதன்மையாகிய சிவம் தனித்திருக்கும் பொழுது அதற்கு இயக்கம் இல்லை (வாய்மூடி இதுக்கும் பொழுது பேச்சில்லை என்பது போல) அது தன்னுள் இரண்டாக பகுந்தால் ஆங்கே அருள்தோன்றும். 

முதற்றே உலகு - சிவத்திருத்து பகுந்த அருள் முன்னிடமாக இவ் வுலகம் தோன்றுகின்றது.  
ஆதி பகுந்தது என்பதற்குரிய விளக்கம் 
"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்" -1
என்று திருமந்திரம் கூறுவது காண்க. வாய்திறந்தாலே   சொல் வரும் - அருள் விரிந்தாலே உலகம் தோன்றும்.




ஆசிரியர் குறிப்பு

இந்நூல் ஆசிரியர் அருட்ப அவதானி அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சொக்கம்பட்டி என்னும் ஊரில் திரு.சின்னான் - மீனாம்பாள் ஆகியோரின் புதல்வனாக 1948 இல் பிறந்தார்.பள்ளி படிப்பை முடித்து வணிகத்தில் ஈடுபட்டு சிறந்த முறையில் வணிகம் புரிந்தார் . சிறு வயது முதலே திருக்குறளில் அதிக ஈடுபாடும்  வர வர   திருமந்திரத்தில் ஊன்றிய கவனமும் கொண்டு பயின்றார். பின் திருஅருட்பாவில் ஆழ்ந்து தோய்நதார். திருவாசகமும் அவரது உள்ளங்கவர்ந்து ஓதிய நூலே ஆகும். இந்த அகவல் உரை மட்டுமின்றி மேலும் பல அரிய நூல்கள் எழுதி வைத்துள்ளார். அடுத்தடுத்து அவை வெளிவரும். அவருக்கு அருட்கவியரசு, அருட்ப அவதாணி,சொல்லேருழவர், அருட்பமுகில் எனபல பட்டங்கள் வழங்கி பல அமைப்புகள் சிறப்பித்துள்ளன.