இந்நூல் ஆசிரியர் அருட்ப அவதானி அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சொக்கம்பட்டி என்னும் ஊரில் திரு.சின்னான் - மீனாம்பாள் ஆகியோரின் புதல்வனாக 1948 இல் பிறந்தார்.பள்ளி படிப்பை முடித்து வணிகத்தில் ஈடுபட்டு சிறந்த முறையில் வணிகம் புரிந்தார் . சிறு வயது முதலே திருக்குறளில் அதிக ஈடுபாடும் வர வர திருமந்திரத்தில் ஊன்றிய கவனமும் கொண்டு பயின்றார். பின் திருஅருட்பாவில் ஆழ்ந்து தோய்நதார். திருவாசகமும் அவரது உள்ளங்கவர்ந்து ஓதிய நூலே ஆகும். இந்த அகவல் உரை மட்டுமின்றி மேலும் பல அரிய நூல்கள் எழுதி வைத்துள்ளார். அடுத்தடுத்து அவை வெளிவரும். அவருக்கு அருட்கவியரசு, அருட்ப அவதாணி,சொல்லேருழவர், அருட்பமுகில் எனபல பட்டங்கள் வழங்கி பல அமைப்புகள் சிறப்பித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக