1. கடவுள் வாழ்த்து
இறைவனது திருவடி சிறப்பை வாழ்துவது
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்தெல்லாம் - உலகில் உள்ள எந்த மொழியில் இருக்கும் எழுத்தை உச்சரிக்கப், பேச வேண்டுமாயினும்
அகர முதல - வை 'ஆ ' எனத் திறந்த பின்னரே (மூடி இருக்கும் உதடுகள் இரண்டாக திறந்து) உச்சாரிக்கவும், பேசவும் முடியும். ஆகையால் என்மொழிக்கும், எவ்வெழுத்துக்கும் 'ஆ ' என்பதே முதன்மை ஆகிறது.
ஆதிபகவன் - ஆதியாகிய அனைத்திற்கும் முதன்மையாகிய சிவம் தனித்திருக்கும் பொழுது அதற்கு இயக்கம் இல்லை (வாய்மூடி இதுக்கும் பொழுது பேச்சில்லை என்பது போல) அது தன்னுள் இரண்டாக பகுந்தால் ஆங்கே அருள்தோன்றும்.
முதற்றே உலகு - சிவத்திருத்து பகுந்த அருள் முன்னிடமாக இவ் வுலகம் தோன்றுகின்றது.
ஆதி பகுந்தது என்பதற்குரிய விளக்கம்
"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்" -1
என்று திருமந்திரம் கூறுவது காண்க. வாய்திறந்தாலே சொல் வரும் - அருள் விரிந்தாலே உலகம் தோன்றும்.